செய்தி விவரங்கள்

கருணாநிதியின் உயிரிழப்பு தி.மு.க வுக்கு நடக்கப்போவது என்ன? ஜோதிடரின் கணிப்பு !!!

கருணாநிதியின் உயிரிழப்பு தி.மு.க வுக்கு நடக்கப்போவது என்ன? ஜோதிடரின் கணிப்பு !!!

 

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மாலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். திமுக தலைவர் கருணாநிதி தனது பிறந்த நட்சத்திரமாகிய மிருகசீரிட நட்சத்திரத்திலும் பிறந்த ராசியுமான ரிஷபராசியிலுமே இறந்திருப்பது ஜோதிட விதிகளின்படி ஒரு புண்ணிய அமைப்பாகும்.

இதுகுறித்து பிரபல ஜோதிடர் முனைவர் கே.பி.வித்யாதரன் கூறியதாவது, கிருஷ்ண பரமாத்மா, அர்ச்சுனனுக்கு மீண்டும் பூமியில் பிறவா மோட்ச யோகத்தைத் தர ஏகாதசி திதி நாளில் பகவத் கீதையை உபதேசிக்கத் தொடங்கினார். வேணுகோபால ஸ்வாமி கோயிலுக்கு எதிரே வசித்து வந்த கோபாலபுரத்துக் கோமகனான கலைஞர், இந்த ஏகாதசி நாளில் வைகுந்தத்தில் முதன்மை வரவேற்பு பெற்று ஐக்கியமாகி உள்ளார்.

ஜோதிட விதிகளின்படி பிறந்த நட்சத்திர அதிபதி செவ்வாய், மோட்சகாரகன் கேதுவுடன் இணைந்திருக்கும் நேரத்திலும் (மாலை 6.10 மணி) எண் ஜோதிடப்படி சித்த புருஷர்களுக்குரிய எண்ணான 7-ம் தேதியில் இன்னுயிர் நீத்திருப்பதும், அவர் உருவாக்கிய இயக்கமும் நிலைத்து வளரும் என்பதையே உணர்த்துகிறது.

கலைஞரது மறைவு, ஆச்சார்யனாகவும் பார்த்தசாரதியாகவும் விளங்கும் கிருஷ்ண பரமாத்மாவால் பகவத்கீதை உபதேசிக்கப்பட்ட ஏகாதசி திதியில் நிகழ்ந்திருப்பது ஒரு சிறப்பான அம்சமாகும். ஜாதிகளை வேரறுக்க வந்த ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை கலைஞர் எழுதி அனைவரது மனதிலும் இடம்பிடித்ததோடு மட்டுமல்லாமல், அனைவருக்கும் குருவாகவும் வழிகாட்டியாகவும் இருந்து சரித்திரம் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.