செய்தி விவரங்கள்

கருணாநிதியில் இருந்து கலைஞராக மாறிய தருணங்கள்!

கருணாநிதியில் இருந்து கலைஞராக மாறிய தருணங்கள்!

கலைஞரின் தொண்டர்களுக்கு அவர் தங்களின் தலைவர் என்றும், பிறருக்கு அவர் ஐந்து முறை முதலைமச்சராக பதவிவகித்தவர் என்றும், அவரின் எதிர்கட்சியினருக்கு அவர் விவேகமுள்ள அரசியல் உத்தியியலாளர்(strategist) என்றும், ஆனால் ஒட்டு மொத்த மக்களுக்கும் அவர் கலைஞர் என்றே அடையாளம் உள்ளது.

திராவிடத்தின் மூன்று முக்கிய மூத்த தலைவர்களில் கலைஞரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இ.வி.ராமசாமி(பெரியார்), சி.ன்.அண்ணாதுரை(அண்ணா), மு.கருணாநிதி(கலைஞர்) ஆகிய மூன்று தலைவர்களும் ஒருவரோடு ஒருவர் ஐக்கியம், ஒரே கொள்கையை கொண்டவர்கள் என்றும் மக்களால் கூறப்படுபவர்.

கருணாநிதியில் இருந்து கலைஞராக மாறிய தருணங்கள்!

M.G.ராமசந்திரன்(M.G.R), ஜெயலலிதா, காமராஜர், ராஜாஜி மற்றும் பல அரசியல் தலைவர்களை கண்ட ஒரே மூத்த தலைவர் கலைஞர் தான் இருந்தார். ஆனால் நேற்று அவரவும் தன்னுடைய 94-வது வயதில்
இந்த உலகத்தை விட்டு பிரிந்துள்ளார். இருப்பினும் அவர் எப்பொழுதும் அரசியலில் ஒரு சகாப்தம் தான்.