செய்தி விவரங்கள்

கலைஞர் கருணாநிதி - கோபாலபுரம் பகுதி காவல்துறை கட்டுப்பாட்டில் !!!

கலைஞர் கருணாநிதி - கோபாலபுரம் பகுதி காவல்துறை கட்டுப்பாட்டில் !!!

 

கலைஞர் கருணாநிதியின் உடல் உறுப்புக்கள் செயலிழந்து வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியாகியுள்ளது. இதனால் தொடர்ந்து மருத்துவமனை முன்பே பல தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் போதுமான மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டும் உடலுறுப்புக்கள் செயலிழந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காவேரி மருத்துவமனையின் அறிக்கையை அடுத்து தொண்டர்கள் மருத்துவமனை மற்றும் கோபாலபுரம் இல்லத்திற்கு விரைந்து கொண்டு இருப்பதால் கோபாலபுரம் பகுதி முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டியில் கொண்டுவரப்பட்டுள்ளது.