செய்தி விவரங்கள்

கோபாலபுரம் இல்லத்திற்கு அழுதவண்ணமே சென்ற குடும்ப உறுப்பினர்கள் !!!

கோபாலபுரம் இல்லத்திற்கு அழுதவண்ணமே சென்ற குடும்ப உறுப்பினர்கள் !!!

 

கலைஞர் கருணாநிதியின் உடல் உறுப்புக்கள் செயலிழந்து வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியாகியுள்ளது. இதனால் தொடர்ந்து மருத்துவமனை முன்பே பல தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் போதுமான மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டும் உடலுறுப்புக்கள் செயலிழந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைஞரின் கோபாலபுரம் இல்லத்திலும் தொண்டர்கள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காவேரி மருத்துவமனையில் இருந்து அழுதவண்ணமே வெளியேறிய துர்கா ஸ்டாலின், மோகனா தமிழரசு, செல்வி மற்றும் பலர் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றுள்ளனர்.