செய்தி விவரங்கள்

முழுவதும் மூடப்பட்ட அம்புலன்ஸ் காவேரி மருத்துவமனைக்குள் !!!

முழுவதும் மூடப்பட்ட அம்புலன்ஸ் காவேரி மருத்துவமனைக்குள் !!!

 

கலைஞர் கருணாநிதியின் உடல் உறுப்புக்கள் செயலிழந்து வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியாகியுள்ளது. இதனால் தொடர்ந்து மருத்துவமனை முன்பே பல தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் போதுமான மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டும் உடலுறுப்புக்கள் செயலிழந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைஞரின் கோபாலபுரம் இல்லத்திலும் தொண்டர்கள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மருத்துவமனைக்குள் முழுவதும் மூடப்பட்ட அம்புலன்ஸ் வண்டி ஒன்று சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அம்புலன்ஸ் வண்டி ஏன் சென்றுள்ளது என்று தெரியவரவில்லை.