செய்தி விவரங்கள்

மருத்துவமனையிலிருந்து அழுதுகொண்டே வெளியேறும் கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் !!!

மருத்துவமனையிலிருந்து அழுதுகொண்டே வெளியேறும் கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் !!!

 

கலைஞர் கருணாநிதியின் உடல் உறுப்புக்கள் செயலிழந்து வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியாகியுள்ளது. இதனால் தொடர்ந்து மருத்துவமனை முன்பே பல தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் போதுமான மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டும் உடலுறுப்புக்கள் செயலிழந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைஞரின் கோபாலபுரம் இல்லத்திலும் தொண்டர்கள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கலைஞர் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு வருகை தந்திருந்த நிலையில் தற்போது ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர். ஸ்டாலினின் மனைவி அழுதவண்ணமே வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் குஷ்பு அழுத வண்ணம் மருத்துவ மனைக்குள் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.