செய்தி விவரங்கள்

கலைஞருக்காக உயிரை கொடுக்கிறோம் - தொண்டர்கள் கதறல் !!!

கலைஞருக்காக உயிரை கொடுக்கிறோம் - தொண்டர்கள் கதறல் !!!


கலைஞர் கருணாநிதியின் உடல் உறுப்புக்கள் செயலிழந்து வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியாகியுள்ளது. இதனால் தொடர்ந்து மருத்துவமனை முன்பே பல தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் போதுமான மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டும் உடலுறுப்புக்கள் செயலிழந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைஞரின் கோபாலபுரம் இல்லத்திலும் தொண்டர்கள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மருத்துவ மனை முன்பு மற்றும் கலைஞரின் இல்லத்தின் முன்பு குவிந்த தொண்டர்கள் தலைவருக்காக தமது உயிரை தருகின்றோம் என குரல் எழுப்பிய வண்ணமே உள்ளனர். தொடர்ந்தும் மருத்துவமனை முன்பு பரபரப்பான சூழ்நிலை காணப்பட்ட வண்ணமே உள்ளது. மருத்துவமனை அறிக்கை வெளியாகிய பின்பு உள்ளே என்ன நிலமை என்பது தெரியவரவில்லை.