செய்தி விவரங்கள்

முதல்வர் - ஸ்டாலின் திடீர் சந்திப்பு; பாதுகாப்பை பலப்படுத்த பொலிஸாருக்கு உத்தரவு

முதல்வர் - ஸ்டாலின் திடீர் சந்திப்பு; பாதுகாப்பை பலப்படுத்த பொலிஸாருக்கு உத்தரவு

 

திமுக தலைவர் கருணாநிதி தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் மீண்டும் நேற்றிரவு 6.30 மணி அளவில் திடீரென்று பின்னடைவு ஏற்பட்டது.

வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த தகவல் பரவியதால்இ மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவாகி வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.