செய்தி விவரங்கள்

நாடாளுமன்றில் அசீட் தாக்குதலொன்றுக்கு திட்டம்: அதிர்ச்சித் தகவல்

சிறிலங்கா நாடாளுமன்றத்திற்குள் வைத்து மிளகாய்தூள் தாக்குதலை நடத்தியமஹிந்தவாதிகள், அசீட் தாக்குதலையும் நடத்த திட்மிட்டிருந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் அதிர்ச்சித்தகவலொன்றை வெளியிட்டிருக்கின்றார்.

சிறிலங்கா நாடாளுமன்றில் நவம்பர் 16 ஆம் திகதி மிளகாய்தூள் தாக்குதல்நடத்தியவர்களே இந்தத் தாக்குதலையும் மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாக மிளகாய்தூன்தாக்குதலுக்கு இலக்கான நாடாளுமன்ற உறுப்பினரான ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவிக்கின்றார்.

சிறிலங்காவில் யார் பிரதமர் என்ற குழப்பம் நீடித்துவரும் நிலையில்மஹிந்தவாதிகள் கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்திற்குள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்த வன்முறைகளால் பாதிக்கப்பட்ட ஜயவிக்கிரம பெரரா, மஹிந்தவாதிகளின்இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டடுவந்த நிலையில் நவமபர் 21 ஆம் திகதியான நேற்றைய தினம் நீதி கோரி பொலிஸ் தலைமையகத்திற்கு சென்றுமுறைப்பாடொன்றையும் பதிவுசெய்துள்ளார்.