செய்தி விவரங்கள்

வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் வழங்காத வெகுமதிகளை வழங்கவுள்ள மஹிந்த!

இலங்கை வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் வழங்காத நிவாரணத்தை வழங்க மஹிந்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இடைக்கால வரவு செலவுத்திட்ட கணக்கில் இந்த நடவடிக்கைக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதுவரையில் இது தொடர்பில் புதிய யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரூபாவின் பெறுமதியை நிலையான நிலைக்கு கொண்டு வருவதே தங்கள் நோக்கம் என அவர் கூறியுள்ளார்.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் போது பெருமளவு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனை மீண்டும் கட்டியெழுப்புதவதற்கான நடவடிக்கைகளை ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.