செய்தி விவரங்கள்

பேருந்து பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி !

பேருந்து பயணக் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் ஆராயும் சந்திப்பொன்று இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

பேருந்து சங்கங்கள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு என்பவற்றுக்கு இடையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டீசல் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து பயணக் கட்டணத்தை 2 சதவீதத்தால் குறைப்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரியவருகிறது.