செய்தி விவரங்கள்

இக்கட்டான அரசியல் சூழலில் ரணிலை நெருக்கடிக்குள் தள்ளும் கூட்டமைப்பு !

ஒரு ஜனநாயக ரீதியான நல்லாட்சி நடைபெற்றுவரும் நிலையில், அதில் நம்பகத்தன்மை என்பதும், வெளிப்படைத்தன்மை என்பதும் பொதுமக்களின் ஆணைய மதித்து நடத்தல் என்பதும் உள்ளடங்கியிருக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறீநேசன் தெரிவித்துள்ளார்.

ஆனால் எவருக்கும் எதுவுமே தெரியாமல் கடந்த 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதியை நியமித்திருப்பது அரசியல் சாசன சட்ட விதிகளுக்கு முரணானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லங்காசிறிக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் சர்வதேசத்தை முழுதாக இலங்கையின்பால் ஈர்க்கச் செய்துள்ளது.

இந்நிலையில் தற்போது இலங்கை அரசியல் ரீதியில் பின்னடைவை எதிர்நோக்கியிருக்கக் கூடிய நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டையும் அறிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த விடயங்கள் எதிர்காலத்தில் வடக்கு கிழக்கு தமிழர்களிடத்தில் எவ்வாறான தாக்கங்களை செலுத்தும் என்பது தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசன் மேலும் தெரிவித்துள்ளார்.