செய்தி விவரங்கள்

பரிதாபகரமான நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 17 வயது சிறுவன்!

பரிதாபகரமான நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 17 வயது சிறுவன்!

பொகவந்தலாவ லொய்னோன் தோட்டபகுதியில் உள்ள ஆறு ஒன்றில் இருந்து 17 வயது சிறுவன் ஒருவன் பரிதாபகரமான நிலையில் 30.10.2018.செவ்வாய்கிழமை மாலை 05.30 மணியளவில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ஆற்றின் பகுதியில் விவசாய தோட்டத்திற்கு வரிச்சிவகைகளை வெட்டுவதற்காக சென்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஆற்றுப் பகுதிக்கு சென்ற சிறுவனை காணவில்லை என தோட்ட பொதுமக்களும் உறவினர்களும் நீண்ட நேர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில் நீண்ட லயன் குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள ஆற்றில் சடலமாக கிடந்ததை இனங்கண்டனர்.

இது குறித்து பொதுமக்கள் உடனடியாக பொகவந்தலாவபொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

தகவல் அறிந்த பொகவந்தலாவ பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பொகவந்தலாவ பிரதேசவைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டு சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சடலமாக மீட்கபட்ட இளைஞர் 17வயதுடைய ராத கிருஸ்சாந்தன் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், குறித்த சிறுவனின் தாய் கொழும்பு பகுதியில் தொழில் புரிந்து வருவதாகவும்ன்தந்தையின் பாராமரிப்பில் இந்த சிறுவன் வளர்ந்து வந்ததாகவும் பொகவந்தலாவ பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தடைவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு இது கொலையா? அல்லது தவறிவிழுந்ததில் குறித்த சிறுவன் உயிர் இழந்தாரா? என்ற சந்தேகம் பொலிஸாருக்கு எழுந்துள்ள நிலையில் தீவிரமாக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

சிறுவனின் சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் 31.10.2018.புதன்கிழமை நாவலபிட்டி மாவட்டவைத்தியசாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது,