செய்தி விவரங்கள்

பிற்பகல் வேளையில் பெண்ணிடம் வீரத்தை காட்டிய நபர்

அம்பாறை மாவட்டம் மத்தியமுகாம் 4ம் கிராமம் பிரதேசத்தில் கத்திமுனையில் பணத்தினை பறித்துள்ள சம்பவம் ஒன்று நேற்று மாலை 5:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பிற்பகல் வேளையில் பெண்ணிடம் வீரத்தை காட்டிய நபர்

சுவாட் நிறுவனத்தில் பணியாற்றும் ந.சுபாசினி என்ற பெண் நிறுவனத்தில் பணத்தினை அறவிட்டு வந்தவேளை கத்தியால் குறித்த பெண்ணின் கையை வெட்டி தாக்கி பணத்தினை அபகரித்துள்ளதாக உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

மோட்டார் வாகனத்தில் வந்த இருவரே இந்த கொள்ளையை அரங்கேற்றியுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண் மத்தியமுகாம் மத்திய மருந்தகத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாவிதன்வெளி பிரதேசத்தில் இவ்வாறான சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடையமாகும்.

மத்தியமுகாம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.