செய்தி விவரங்கள்

பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த! சட்டமா அதிபரின் அறிவிப்பு வெளியானது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்ட விதம் சட்ட ரீதியானதல்ல என சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த! சட்டமா அதிபரின் அறிவிப்பு வெளியானது

சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு இது தொடர்பில் சட்ட மா அதிபர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.ரணில் விக்ரமசிங்கவை பணி நீக்கம் செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட முறை சட்டத்திற்கு முரணானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்ற செயன்முறைகளை பயன்படுத்தி ரணில் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவியேற்ற பின்னர் சட்ட மா அதிபர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பானது மஹிந்த அணிக்கு பேரிடியாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.