செய்தி விவரங்கள்

அவசரமாக கொழும்பு வருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் அழைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் அவசரமாக கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அவசரமாக கொழும்பு வருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் அழைப்பு

கட்சியின் உள்ளக தகவல் வட்டாரங்களின் தகவல் அடிப்படையில இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் நாளை கொழும்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, இந்த நாட்களில் வெளிநாடுகளில் தங்கியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரையும் மீண்டும்
இலங்கைக்கு வருகைத்தருமாறு அழைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் தற்போது தொங்கு பாராளுமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த அரசாங்கத்தை தீர்மானிக்கும் மிகப் பெரும் சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மாறியுள்ளது. இதன் காரணமாக தென்னிலங்கையின் இரு பிரதான கட்சிகளும் கூட்டமைப்புடன் சமரச பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.