செய்தி விவரங்கள்

ரணில் மீது அன்பு காட்டும் மஹிந்தவின் மகன்!

ரணில் மீது அன்பு காட்டும் மஹிந்தவின் மகன்!

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அலரி மாளிகையில் இருந்து பலவந்தமான வெளியேற்ற மாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகனான நாமல், பிபிசி உலக சேவைக்கு இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமரான ரணில் அலரி மாளிகையை விட்டு வெளியேற கால அவகாசம் வழங்குவோம் என நாமல் கூறியுள்ளார்.

அலரி மாளிகையில் இருந்து ரணிலை வெளியேற்றுவதற்கு நாங்கள் எவ்வித சக்தியையும் பயன்படுத்த மாட்டோம்.
யார் என்ன கூறினாலும் அவர் எங்கள் முன்னாள் பிரதமர். அலரி மாளிகையை விட்டு வெளியேற அவருக்கு பொருத்தமான நேரம் வழங்க வேண்டும் என நாமல் குறிப்பிட்டுள்ளார்.