செய்தி விவரங்கள்

மனிதர்கள் நீண்டகாலம் உயிர்வாழலாமாம்!! இதை செய்யுங்கள்!!!

மனிதர்கள் நீண்டகாலம் உயிர்வாழலாமாம்!! இதை செய்யுங்கள்!!!

 

நடுத்தர வயதினையுடைய மனிதர்களுக்கு அமெரிக்க ஆய்வாளர்கள் மகிழ்ச்சியான ஒரு அறிவித்தலினை வெளியிட்டுள்ளனர். பல வருட காலம் உடற்பயிற்சிகள் இன்றி சோம்பேறியாக நாட்களைக் கழித்த நடுத்தர வயதினர், தமது வாழ்க்கையில் ஏற்பட்ட உடல் நலப் பாதிப்புக்களை இல்லாமப் போக்கமுடியும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

அதற்காக இந்த வயதினர் கிரமமான உடற்பயிற்சியினை மேற்கொள்ளவேண்டும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த கிரமமான உடற்பயிற்சியின்மூலம் அந்த பாதிப்புக்களை நீக்கி புதுப்பொலிவினைப் பெறலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க இருதய சங்கத்தின் உடற்பயிற்சி வழிகாட்டல்கள் அடிப்படையில் இரண்டு ஆண்டு காலத் திட்டம் அமுலாக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்ட நடுத்தர வயதினரின் இருதயங்கள் சிறப்பாக வேலை செய்ததாகவும், மாரடைப்பு அபாயம் குறைந்ததாகவும் ரெக்சாஸ் பல்கலைக்கழக பேராசிரியர் பெஞ்சமின் லெவின் தெரிவித்தார். இப்பகூட ஒன்றும் கெட்டுப்போகவில்லை என்பார்களே, அதுபோல ஒரு மகிழ்ச்சியான ஆய்வாகத்தான் இது வெளிவந்திருக்கிறது.

நடுத்தர வயதினரிடம் பொதுவாக ஒரு மூட நம்பிக்கை இருக்கின்றது, அதாவது உடற்பயிற்சிகள் இல்லாமல் தொப்பையும் பருத்த உடலும் கொண்டவர்கள் இனிமேல் தம்மால் பழைய உடலமைப்பைப் பெறமுடியாதென நம்புகின்றனர். உண்மையில் இது தவறான கணிப்பாகும். எந்த வயதினர்க்கும் உடற்பயிற்சி இளமையான தோற்றத்தினை மூட்டுத் தந்துவிடும் என விஞ்ஞானம் சொல்கிறது. நடுத்தர வயதினரிடமுள்ள மேற்படி மூட நம்பிக்கைதான் அவர்களை வேகமாக மரணிக்க வைக்கின்றது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.