செய்தி விவரங்கள்

ரித்விகாவை எதிர்க்கும் பிரபல தொகுப்பாளினி !!!

ரித்விகாவை எதிர்க்கும் பிரபல தொகுப்பாளினி !!!

 

பிக்பாஸ் என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி நடந்து முடிந்துவிட்டது. இதில் இறுதியாக ரித்விகா 2வது சீசனை வெற்றி பெற்றுவிட்டார், அவருக்கு பிரபலங்களும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தொகுப்பாளினி பிரியங்கா ஒரு பேட்டியில், தமிழ் மக்கள் ஜெயிக்க வேண்டும் என்று சொல்வது எல்லாம் சரியா என்று கேட்க, அதற்கு அவர், தமிழனா இருந்தா செய் என்று சொல்வது எல்லாம் எனக்கு பிடிக்காது.

கிரிக்கெட் விளையாடும் போது இந்தியா மற்ற நேரத்தில் தமிழ், ஹிந்தி என பிரிக்கிறீர்கள். நாம் வேலை செய்யும் இடத்தில் உண்மையாக உழைக்க வேண்டும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் பெண் ஜெயிக்கவில்லை என்ற வருத்தம் இருக்கிறது என்றெல்லாம் பேசினார்கள். நாளைக்கே அவர்களுக்கு ஷாருக்கானுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால் போக மாட்டார்களா, இல்லை தமிழ் என்று சொல்லிக் கொண்டு இருப்பார்களா?. உங்களது உழைப்பு தான் விஷயம், நம் மொழி என்ற உணர்வு இருக்க வேண்டும் ஆனால் உங்களது உழைப்பால் தான் உயர்வை பார்க்க வேண்டும் என்று பேசியுள்ளார்.