செய்தி விவரங்கள்

மணிரத்னத்திடம் விஜய் சேதுபதி கதை கேட்கும் போது குத்தாட்டம் போட்ட நபர் !!!

மணிரத்னத்திடம் விஜய் சேதுபதி கதை கேட்கும் போது குத்தாட்டம் போட்ட நபர் !!!

 

தமிழ் சினிமாவில் தற்போதைய காலகட்டத்தில் நம்பிக்கையான நடிகராக வலம்வருபவர் விஜய் சேதுபதி. இவர் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவரின் செக்கச்சிவந்தவானம், 96 படங்கள் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் செக்கச்சிவந்த வானம் படத்தின் கதையை மணிரத்னம் சொல்லும்போது விஜய் சேதுபதிக்கு சந்தோஷம் தாங்கவில்லையாம்.

கேட்டுக்கொண்டிருக்கும்போதே சினிமாவில் வருவது போன்று அவரின் மனசாட்சி முன்பு வந்து மணி சாரே கதை சொல்கிறார் என்று ஆட்டம் போட்டதாம். ஏனெனில் அவர் ராவணன் படத்தில் துணை நடிகர் வாய்ப்பு கேட்கப்போனாராம். ஆனால் அது கூட கிடைக்கவில்லையாம்.