செய்தி விவரங்கள்

பல கோடி ரூபாயை வாரி இறைத்த பாகுபலி பிரபாஸ் !!!

பல கோடி ரூபாயை வாரி இறைத்த பாகுபலி பிரபாஸ் !!!

 

பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுக்க மொத்த ரசிகர்களின் பார்வையையும் தன் மீது திருப்பியவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி படத்தின் 2 பாகங்களுக்காவும் அவர் 5 ஆண்டுகளை ஒதுக்கினார். அதே நேரத்தில் வேறு எந்த படத்திலும் அவர் கவனம் செலுத்தவில்லை. அதனாலோ என்னவோ அவருக்கு படத்திற்கு பிறகு பெரும் புகழ் கிடைத்தது. மேலும் அவருக்கு புகழ்பெற்ற Madame tussauds அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை வைத்தார்கள். அப்படத்திற்காக அதிக சம்பளம் கூட வாங்கினார்.

சுமார் ரூ 27 கோடி என அந்நேரத்தில் சொல்லப்பட்டது. தற்போது அவர் சாஹோ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் பணத்தை மல்டிபிளக்ஸ் சினிமா திரையரங்கில் முதலீடு செய்துள்ளார். ஆந்திராவின் நெல்லூரில் உள்ள மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் UV Creations நிறுவனத்தின் தியேட்டர் தானாம் அது. உலகின் மூன்றாவது மிகப்பெரிய தியேட்டர் என்ற சிறப்பை பெற்றுள்ளது. மேலும் தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவும் இதுபோல தியேட்டர்களில் பணத்தை முதலீடு செய்துள்ளாராம்.