செய்தி விவரங்கள்

பிக்பாஸ் 2 வெற்றியாளர் ரித்விகா பற்றி சில உண்மைகள் !!!

பிக்பாஸ் 2 வெற்றியாளர் ரித்விகா பற்றி சில உண்மைகள் !!!

 

பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் 2 நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இதில் மக்கள் அனைவரும் ஆசைப்பட்ட ரித்விகாவே பட்டத்தை வென்றுவிட்டார், இதனால் மக்கள் மிகவும் குஷி. பிக்பாஸ் என்ற பிரம்மாண்ட பட்டத்தை பெற்று கொண்டாட்டத்தின் உச்சியில் இருக்கும் ரித்விகா பற்றி சில விஷயங்களை பார்ப்போம்.

ஆகஸ்ட் 5, 1992ம் ஆண்டு பிறந்துள்ளார், படிப்பிலும் ரித்விகா சூப்பர், B.sc Physics முடித்துள்ளார். சிறு வயதில் இருந்தே நடிப்பில் ஆசை இருந்ததால் சின்ன சின்னதாக நிறைய குறும்படங்களில் நடித்துள்ளார். பின் அவருடைய நடிப்பிற்கு அங்கீகாரம் கொடுத்த படம் பாலா இயக்கிய பரதேசி. பின் விக்ரமனின் நினைத்தது யாரோ என்ற படத்திற்காக துணை நடிகைக்கான விருது எல்லாம் பெற்றார்.

அடுத்தடுத்து ரஜினியின் கபாலி, விக்ரமின் இருமுகன் போன்ற படங்களில் நடித்து வெற்றி கண்டார். கடைசியாக இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது கூட சதாவுடன் இவர் நடித்த Torchlight என்ற படம் வெளியாகி இருந்தது. தற்போது பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுள்ளார்.