செய்தி விவரங்கள்

சிம்பு அதற்கு சரியானவர் இல்லை - கோபப்படும் விஜய் சேதுபதி !!!

சிம்பு அதற்கு சரியானவர் இல்லை - கோபப்படும் விஜய் சேதுபதி !!!

 

விஜய் சேதுபதி-சிம்பு இருவருமே தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள். படத்தில் கூட எல்லோரின் நடிப்பு பேசப்பட்டாலும் இவர்கள் இருவரது நடிப்பு பிரம்மிப்பாக பேசப்படுகிறது. இருவரும் ஒரு காட்சியில் செம கெத்தாக நடந்து வருவது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீன் என்றே கூறலாம், இப்படத்தை பார்த்தவர்கள் சிம்பு ஈஸ் பேக் என்றெல்லாம் கூறி வருகிறார்கள். சிம்பு பற்றி ரசிகர்கள் கூறுவதை விஜய் சேதுபதியிடம் ஒரு பேட்டியில் கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு அவர், சிம்பு அவர்களுக்கு என்ன கம்பேக், அந்த வார்த்தையே தவறு. அவர் மிகவும் ஸ்ட்ராங்காக தான் இருக்கிறார், அவருடைய ரசிகர்களை பாருங்கள், உயிரே வைத்திருக்கிறார்கள். அவருக்கு என்ன கம்பேக், அவர் எங்கேயும் போகவில்லை இங்கேயே தான் இருக்கிறார். அவர் மீது பயன்படுத்தும் அந்த வார்த்தையே தவறு, சரியானது கிடையாது. நான் அவருடன் வேலை பார்த்திருக்கிறேன், ஒரு சீனை எப்படி பார்க்கனும், வசனத்தை எப்படி பேசனும் என்று செம பிளான் போட்டு தான் நடிக்கிறார் என்றார்.