செய்தி விவரங்கள்

விவேகம் வில்லனுக்கு கிடைத்த மிகப்பெரும் கௌரவம் !!!

விவேகம் வில்லனுக்கு கிடைத்த மிகப்பெரும் கௌரவம் !!!

 

அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் கடந்த விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வெளியான படம் விவேகம். படத்திற்கு சில எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும் நல்ல கலெக்‌ஷன். இதில் அவருக்கு நண்பர் போல நடித்து கடைசியில் வில்லனாக மாறியவர் விவேக் ஓபராய். ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகரான இவர் சமூக நல ஆர்வலரும் கூட. அவர் இன்ப்ஸட் எட்ஜ் என்ற இணைய தொடரில் நடித்திருந்தார்.

இது கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதை. தற்போது சர்வதேச எம்மி விருதுக்கு இத்தொடர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வருடந்தோறும் எம்மி விருதுகள் சினிமா போல தொலைக்காட்சிகளில் சிறந்த படைப்பிற்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 46 ம் ஆண்டு சர்வதேச எம்மி விருது வழங்கும் விழா வரும் நவம்பர் 19 ல் வழங்கப்படவுள்ளது. இந்த செய்தி கேட்டு விவேக் ஓபராய் மகிழ்ச்சியடைந்துள்ளாராம்.