செய்தி விவரங்கள்

அஜித் ரசிகரின் அதிர்ச்சிக்குள்ளாக்கும் செயல் !!!

அஜித் ரசிகரின் அதிர்ச்சிக்குள்ளாக்கும் செயல் !!!

 

அஜித் என்ற ஒற்றை பெயருக்காக ஒரு கூட்டமே இருப்பதை எல்லோரும் அறிவர். அவர்களின் மூச்சுக்கூட தலயின் பெயரை தான் சொல்லும். இவர்களுக்கும் அஜித்திற்கும் சினிமாவையும் தாண்டி பல விஷயங்களில் ஒரு பிணைப்பு உள்ளது. அதனால் என்னவோ அஜித்திற்காக இவர்கள் செய்யும் செயல்கள் பலமுறை வியப்படைய வைத்துள்ளது.

அதிலும் கடந்த சில வருடங்களாக இவர்களின் செயல், ரசிகர் என்றாலும் இப்படியெல்லாமா செய்வது என்றுதான் நினைக்க வைக்கிறது. அதுபோன்ற நம்பவே முடியாத நிகழ்வாகத்தான், ரசிகர் ஒருவர் தன்னுடைய ஆண் குழந்தைக்கு தல அஜித் என பெயர் வைத்துள்ளார். இது அஜித் ரசிகர்களையும் தாண்டி பல ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.