செய்தி விவரங்கள்

பெரிய பட்ஜெட் படத்தில் கமிட்டாகியுள்ள பிஜிலி ரமேஷ் !!!

பெரிய பட்ஜெட் படத்தில் கமிட்டாகியுள்ள பிஜிலி ரமேஷ் !!!

 

யூடியுப் மூலம் பிரபலமானவர்கள் பலர். அதில் ஒருவராக தன்னை இணைத்து கொண்டவர் பிஜிலி ரமேஷ். சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகரான இவர், அவரது ரசிகர் மன்றத்தின் உறுப்பினராகவும் உள்ளார். சாதாரண மனிதராக இருந்த இவரை ஒரு பிரபல யூடியுப் சேனல் பிரபலப்படுத்திவிட்டது. அந்த பிரபலத்தின் மூலம் நயன்தாராவின் கோலமாவு கோகிலா ப்ரோமோஷன் வீடியோ பாடலில் நடித்தார்.

தற்போது இன்னொரு வாய்ப்பாக மேயாத மான் இயக்குனர் ரத்னகுமார், அமலாபாலை வைத்து இயக்கிவரும் ஆடை படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளாராம். இதனை இயக்குனரே சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.