செய்தி விவரங்கள்

அபிஷேக் பச்சனுக்கு அறைந்த பெண் கூறிய காரணம் ???

அபிஷேக் பச்சனுக்கு அறைந்த பெண் கூறிய காரணம் ???

 

சினிமாதுறையில் சாதிப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. அதிலும் நடிகர்கள் சந்திக்கும் விமர்சனங்கள், அவமானங்கள் ஏராளம். சினிமா குடும்பத்தில் இருந்து வந்த நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் அப்படிதான். அவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது தான் சந்தித்த கசப்பான விமர்சனங்கள் பற்றி பேசினார். 2002ல் அவர் நடித்த Shararat படத்திற்கு ரசிகர்கள் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது என பார்க்க ஒரு பிரபல திரையரங்கிற்கு சென்றாராம். அப்போது ஒரு பெண் இவரிடம் வந்து கன்னத்தில் அறைந்துவிட்டாராம்.

"நடிப்பதை நிறுத்திவிட்டு வடாபாவ் கடை வை! ஏன் குடும்ப பெயரை கெடுக்கிறாய் என அவர் கேட்டார். இப்போது அது பற்றி நினைத்தால் சிரிப்பு வருகிறது. ஆனால் அப்போது அப்படி இல்லை," என அபிஷேக் கூறினார். aஇந்நிலையில் அபிஷேக் நடிப்பில் கடைசியாக வெளிவந்த Manmarziyaan படமும் மோசமான வசூல் தான் பெற்றுள்ளது. இதற்கும் அபிஷேக் நடிப்பு மீது கடினமான விமர்சனங்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.