செய்தி விவரங்கள்

விஜய் சேதுபதி வீட்டில் ரெய்டு ???

விஜய் சேதுபதி வீட்டில் ரெய்டு ???

 

தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். சமீபத்தில் வெளியாகியுள்ள செக்கச்சிவந்த வானம் படத்தில் அவர் நடித்துள்ள கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அவரின் மற்றொரு 96 படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது. இதுஒருபுறமிருக்க விஜய் சேதுபதி ரஜினியின் பேட்ட பட ஷூட்டிங்கிற்காக வெளியூரில் உள்ளார்.

அந்த நேரத்தில் அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது ரெய்டு இல்லை வழக்கமாக சொத்து கணக்குகளை சரிபார்க்கும் நடைமுறை என்றும் கூறப்படுகிறது. மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.