செய்தி விவரங்கள்

என்னை பிக்பாஸுக்கு வரச்சொல்லி கூப்பிட மாட்டாங்க !!!

என்னை பிக்பாஸுக்கு வரச்சொல்லி கூப்பிட மாட்டாங்க !!!

 

சினிமாவை விட அதிக ரசிகர்கள் உள்ளது டிவி நிகழ்ச்சிகளுக்குத்தான். அதிலும் குறிப்பாக 100 நாட்கள் ஓடும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் சென்ற வருடம் பிரபலமானது. ஆனால் இந்த வருடம் இரண்டாவது சீசன் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. அதனால் தற்போது இறுதி கட்டத்தில் முதல் சீசன் போட்டியாளர்களை மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அழைத்து வந்துள்ளனர்.

சினேகன், ஆரவ், காயத்ரி, ஆர்த்தி, வையாபுரி, சுஜா வருணி என 6 முதல் சீசன் போட்டியாளர்கள் வீட்டுக்குள் வந்துள்ளனர். இந்நிலையில் முதல் சீசனில் பங்கேற்றிருந்த நடிகை காஜல் பசுபதி ட்விட்டரில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கும்போது "என்னை பிக்பஸ்ஸுக்கு வரச்சொல்லி கூப்பிடமாட்டார்கள். நான் நிகழ்ச்சி பற்றி வெளியில் குறைசொல்லி பேசிவிட்டேனே" என கூறியுள்ளார்.