செய்தி விவரங்கள்

விக்ரம் எடுக்கும் புதிய அவதாரம் !!!

 

விக்ரம் எடுக்கும் புதிய அவதாரம் !!!

 

விக்ரம் தமிழ் சினிமாவில் படத்திற்கு படம் புதிய முயற்சியை எடுப்பவர். ஒவ்வொரு விழாவிலும் வேறு வேறு மாதிரி இருப்பார், அந்த அளவிற்கு பல கெட்டப் போட்டவர் விக்ரம். இந்நிலையில் தற்போது இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் கர்ணன் படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படம் ரூ 200 கோடி பட்ஜெட்டில் உருவாகும் என கூறப்படுகின்றது, இதில் பல முன்னணி நட்சத்திரங்கள் கமிட் ஆகியுள்ளனர். தற்போது ஐ படத்திற்கு பிறகு விக்ரம் மீண்டும் இப்படத்திற்காக உடல் எடையை கடுமையாக ஏற்றி வருகின்றாராம். ஏனெனில் கர்ணன் என்பவன் உடல் அளவிலும் வலிமையானவன் என்பதால் தன் உடல் எடையை விக்ரம் ஏற்றி வருவதாக கூறப்படுகின்றது.