செய்தி விவரங்கள்

பிரபல பாடகி விஜய் லட்சுமிக்கு திருமணம் !!!

பிரபல பாடகி விஜய் லட்சுமிக்கு திருமணம் !!!

 

சொப்பன சுந்தரி நான் தானே என்ற பாடல் மூலம் பல இளைஞர்களை குத்தாட்டம் போட வைத்தவர் வைக்கம் விஜய லட்சுமி. அண்மையில் சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தில் வாயாடி பெத்த புள்ள பாடலிலும் பாடியுள்ளார். மலையாள சினிமாவை சேர்ந்த இந்த பாடகி தமிழ் வார்த்தைகளை உச்சரித்தால் கத்தி போல கூர்மையாக இருக்கும் என பலரும் கூறுவர். சில மாதங்களுக்கு முன் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

பின் கருத்து வேறுபாட்டால் திருமணம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அவருக்கு அனூப் என்பவருடன் நாளை நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாம். அனூப் Interior Designer & contractor ஆக இருக்கிறாராம். அத்துடன் இவர்களுக்கு திருமணம் வரும் அக்டோபர் 22 ல் வைக்கம் மகா தேவ கோவிலில் நடைபெறவுள்ளதாம். விஜய் லட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை தற்போது படமாக எடுக்கப்பட்டு வருகிறது.