செய்தி விவரங்கள்

பிரபல நடிகர் கோவை செந்தில் திடீர் மரணம் !!!

பிரபல நடிகர் கோவை செந்தில் திடீர் மரணம் !!!

 

தமிழ் சினிமா கடந்த சில நாட்களாக வரும் பிரபலங்களின் மரண செய்தியால் சோகத்தில் உள்ளது என்றே கூறலாம். ராக்கெட் ராமநாதன், வெள்ளை சுப்பையா போன்ற பிரபலங்களின் மரண செய்தியையே யாரும் மறக்கவில்லை. இப்போது பிரபல நடிகரான கோவை செந்தில் அவர்களின் மரண செய்தி மற்றொரு அதிர்ச்சி.

இன்று அவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. என்ன காரணம், எப்படி இறந்தார் என்பது சரியாக தெரியவில்லை. படையப்பா, புதுமை பித்தன், கோவா, ஏய் என நிறைய வெற்றி படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்துள்ளார் கோவை செந்தில்.