செய்தி விவரங்கள்

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போவது இவரா ???

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போவது இவரா ???

 

பிக்பாஸ் 2வது சீசன் ஆரம்பத்தில் கொஞ்சம் டல் அடித்தாலும் இப்போது சண்டைகளோடு சூடு பிடித்துள்ளது. தொடர்ந்து ஷாரிக், மஹத், டேனி கடுமையான ஆண் போட்டியாளர்களாக வெளியேறி வருகிறார்கள். இந்த வாரம் செண்ராயன், ஜனனி, மும்தாஜ், ஐஸ்வர்யா மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் எலிமினேஷனுக்கு தேர்வாகியுள்ளனர். நிகழ்ச்சியில் இருந்து அநேகமாக ஐஸ்வர்யா வீட்டை விட்டு வெளியேறுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் இருந்து கசிந்த தகவலிலும் ஐஸ்வர்யா என்று தான் கூறப்படுகிறது. ஆனாலும் மக்கள் எதிர்ப்பார்க்காத விதமாக சில நேரத்தில் பிக்பாஸ் டுவிஸ்ட் வைக்கிறார், இந்த முறையும் அப்படி இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இறுதியாக மும்தாஜ், ரித்விகா இடையே கடும் போட்டியோடு பிக்பாஸ் 2 சீசன் முடிவுக்கு வரும் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.