செய்தி விவரங்கள்

யாருக்கும் தெரியாமல் ரகசியமாக விஜய் சேதுபதி அதிரடி !!!

யாருக்கும் தெரியாமல் ரகசியமாக விஜய் சேதுபதி அதிரடி !!!

 

தனக்கு பிடித்தமான கதைகளை தேர்வு நடித்து வரும் நடிகர்களில் விஜய் சேதுபதி முக்கியமானவர். படம் வெற்றியை தருகிறதோ இல்லையோ அதை பற்றியெல்லாம் சிறிதும் கவலைபடாமல் தனது மன நிம்மதிக்காக நடித்து வருகிறார். வருடத்திற்கு 6,7 படங்கள் என ஓய்வில்லாமல் நடித்து வரும் அவரது நடிப்பில் கடைசியாக ஜூங்கா படம் திரைக்கு வந்தது. மேலும் 96, சீதக்காதி போன்ற படங்கள் திரையை மோத இருக்கின்றன.

இந்நிலையில் காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கி பிரபலமான மணிகண்டன் இயக்கத்தில் கடைசி விவசாயி என்ற படத்தில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நடித்து முடித்துள்ளார். இவரது இத்தகைய செயல்பாடுகள் பல வளர்ந்து வரும் நடிகர்கள் இடையே பெரிய ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.