செய்தி விவரங்கள்

பிரபல சின்னத்திரை நடிகை திடீர் தற்கொலை !!!

பிரபல சின்னத்திரை நடிகை திடீர் தற்கொலை !!!

 

பிரபலங்களின் தற்கொலைகள் அதிகமாகி வருகிறது. தற்போது பெங்காலி சினிமாவை சேர்ந்த பாயல் சக்ரபூர்த்தி என்ற நடிகை நேற்று காலை (செப்டம்பர் 5) ஹோட்டல் அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஹோட்டலில் வேலை செய்பவர்கள் அறையை விட்டு நடிகை வெளியே வராததால் சந்தேகத்தில் கதவை தட்டியுள்ளனர், ஆனால் அவரிடம் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை என்பதால் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

விவரம் தெரிந்து வந்த போலீசார் அறை கதவை உடைத்து பார்த்தால் நடிகை தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. தன்னுடைய கணவருடன் விவாகரத்துக்கு பிறகு தனியே வாழ்ந்து வரும் இவருக்கு ஒரு மகன் உள்ளார். சீரியல்களில் அதிகம் நடித்துள்ள இவர் Kelo என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்படம் வரும் செப்டம்பர் 18ம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது.