செய்தி விவரங்கள்

ஐஸ்வர்யாவின் பொய்யை பொது மேடையில் அம்பலமாக்கிய அம்மா !!!

ஐஸ்வர்யாவின் பொய்யை பொது மேடையில் அம்பலமாக்கிய அம்மா !!!

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் ஒரு போட்டியாளர் தான் ஐஸ்வர்யா தத்தா. அவரின் மீது பலரும் சின்னக்குழந்தை என அன்பு வைத்திருந்தார்கள். ஆனால் அவர் பலருக்கும் கோபம் வரும்படியாக செய்துவிட்டார். ராணி மகா ராணி டாஸ்க்கில் அவர் நடந்து கொண்ட விதமும், பாலாஜி மீது குப்பை கொட்டியது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சி தான். கடைசியில் வெறுப்பில் தான் அப்படி நடந்து கொண்டதாக ஒத்துக்கொண்டார்.

இந்நிலையில் கடந்த வாரத்தில் அவர் தன் மீது அம்மாவுக்கு அக்கறையில்லை. பணம் தான் முக்கியம் என நினைக்கிறார்கள். என்னை வந்து யாருமே பார்க்கவில்லை என கூறியுள்ளார். கடந்த வாரம் அவரின் அம்மா உள்ளே வந்து அவரை பார்த்தார். மேலும் ஐஸ்வர்யா நடந்து கொண்ட விதத்தில் எல்லோரிடமும் மன்னிப்பும் கேட்டுகொண்டார். குறிப்பாக பாலாஜியிடம்.

இந்நிலையில் இதை தற்போது பொய்யாக்கியுள்ளார் அவரின் அம்மா. ஐஸ்வர்யா மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவள். அவளுக்காக நான் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன். அவர் 16 வயதில் சென்னைக்கு நடிப்பதற்காக வந்தாள். அவரின் அப்பா அவளை நன்றாக படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என நினைத்தார். ஆனால் அவளுக்கு கலையில் மட்டுமே ஆர்வமாக இருந்தது.

நான் அவளையும் கவனிக்க வேண்டும். குடும்பத்தையும் பார்க்க வேண்டும். வெகு தொலைவில் இருப்பதால் எங்களால் அலைய முடியவில்லை. அவள் தான் எங்களை பார்க்க வருவாள் என கூறியுள்ளார்.