செய்தி விவரங்கள்

முதல் மனைவி மற்றும் மகனுக்கு பாலாஜி துரோகம் செய்தாரா ???

முதல் மனைவி மற்றும் மகனுக்கு பாலாஜி துரோகம் செய்தாரா ???

 

பிக்பாஸ் வீட்டின் மூலம் தனக்கு நல்ல எதிர்காலம் அமையும் குடும்பத்துடன் இணைவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் தாடி பாலாஜி. வீட்டில் போட்டியாளர்களை சிரிக்க வைப்பது எல்லாம் சரி ஆனால் இன்னும் மற்றவர்களை பற்றி பின்னால் பேசுவதை அவர் நிறுத்தவே இல்லை. இது மக்களுக்கு பிடிக்காத ஒரு விஷயமாக இருக்கிறது.

இந்த நிலையில் நித்யா, பாலாஜி குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் பாலாஜி போஷிகாவிற்காக இப்படி வருந்துகிறார். ஆனால் அவரின் முதல் மனைவி மற்றும் அவரது மகன் தருணை கண்டுகொள்வதே இல்லை. அவனும் சின்ன குழந்தை, அவன் மனதிலும் தன் அப்பா பிரபலம் என்ற ஆசையெல்லாம் இருக்குமே.

ஒரு நாளும் பாலாஜி அவனை பற்றி வெளியே சொன்னது இல்லை. போஷிகாவிற்கு வருந்தும் அவர் தருணுக்கு ஏன் இப்படி மோசம் செய்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால் அவர்களுக்காக பாலாஜி ஏங்குகிறார், சில உதவிகளும் செய்கிறார். அது கூட எங்கள் விவாகரத்துக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கும் என்று பேசியுள்ளார்.