செய்தி விவரங்கள்

கலைஞருக்கு ரஜினி, கமல், அஜித் மற்றும் திரைதுறையினரின் இறுதிமறியாதை!

கலைஞருக்கு ரஜினி, கமல், அஜித் மற்றும் திரைதுறையினரின் இறுதிமறியாதை!

கலைஞரை எவ்வாறு அரசியலில் இருந்து பிரிக்க முடியதோ, அவ்வாருதான் கலைஞரை திரைதுறையில் இருந்தும் பிரிக்கமுடியாது. அவரது ஆரம்பகால படைப்பான ராஜகுமாரி(1947), இறுதியாக அவர் படைப்பில் வெளிவந்த பொன்னர் ஷங்கர்(2011) படம்வரை அனைத்தும் திரைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு என தெரிகிறது. அதிலும் அவரது திரைக்கதையில் வெளிவந்த பராசக்தி படம் தற்போது வரை இந்தியா முழுவதும் வெகுவாக பேசப்பட்ட படங்களில் ஒன்று.

கலைஞருக்கு ரஜினி, கமல், அஜித் மற்றும் திரைதுறையினரின் இறுதிமறியாதை!

அவரது உயிர் நேற்று மாலை பிரிந்துள்ள நிலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று அதிகாலையில் இருந்து ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டு உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தனது குடும்பத்தினருடன் வந்து கலைஞருக்கு இறுதி மரியாதையை செய்தார்.

கலைஞருக்கு ரஜினி, கமல், அஜித் மற்றும் திரைதுறையினரின் இறுதிமறியாதை!

அதனை தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் கலைஞருக்கு மரியாதை செய்தார். தல அஜித் அவர்கள் மற்றும் அவரது மனைவி ஷாலினி அவர்களும் மரியாதை செய்தார்கள். மற்றும் பல முக்கியமான திரையுலகை சேந்தவர்கள் என அனைவரும் கண்ணீர்மல்க அங்கு வந்து கலைஞருக்கு தங்களின் இறுதி மரியாதையை செலுத்தி வருகின்றனர்.