செய்தி விவரங்கள்

இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறப்போவது இவரா ???

இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறப்போவது இவரா ???

 

சென்றவாரம் ஷரீக் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டது மற்ற போட்டியாளர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில் இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் 4 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். சென்ட்ராயன், பொன்னம்பலம், யாஷிகா ஆகியோர் வாக்குகள் அடிப்படையில் எலிமினேஷன் லிஸ்டில் உள்ளனர். சென்ட்ராயனுக்கு எதிராக மட்டும் அதிகபட்சமாக 7 பேர் வாக்களித்தனர்.

மேலும் வீட்டின் தலைவியாக உள்ள யாஷிகா வேறு ஒரு போட்டியாளரை எலிமினேட் செய்ய தேர்வு செய்ய வாய்ப்பு கொடுக்கப்பட்டது, அப்போது அவர் ஜனனியை தேர்ந்தெடுத்தார். அதனால் இந்த வாரம் சென்ட்ராயன், பொன்னம்பலம், யாஷிகா, ஜனனி ஆகிய நான்கு பேரில் ஒருவர் வெளியேற்றப்படலாம். யார் என்பது வரும் ஞாயிற்றுக்கிழமை தான் தெரியவரும். இருப்பினும் சென்ட்ராயன் வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர்.