செய்தி விவரங்கள்

திடீரென்று வைரலாகும் நடிகர் விக்ரமின் நியூ லுக் வீடியோ !

ஒரு படத்திற்காக எந்த லெவலுக்கு வேண்டுமானாலும் போகக்கூடியவர் நடிகர் விக்ரம். அதற்கு உதாரணம் ஐ என்ற மாபெறும் பிரம்மாண்ட படம்.

உடலை கட்டுகோப்பாக நடித்து பின் ஆளே அடையாளம் தெரியாமல் ஒல்லியாக இருந்தார். இப்போது இவர் கடாரம் கொண்டான் என்ற படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தை கமல்ஹாசன் அவர்கள் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாட்டில் இருக்கும் விக்ரம் அங்கிருந்து உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் விக்ரமின் புதிய லுக்கை பார்த்த விக்ரம் ரசிகர்கள் சூப்பர் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.