செய்தி விவரங்கள்

சர்கார் பட போட்டியில் ரஜினிகாந்தின் மாஸான செயல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் நவம்பர் 29 ம் தேதி வெளியாகவுள்ளது. பிரம்மாண்ட செலவில் ரூ 550 கோடியில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியிடப்பட்டது.

இதற்காக சென்னையில் பெரும் விழா நடத்தப்பட்டுள்ளது. சங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் அகஷய் குமார் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

நவம்பர் 7 ம் தேதியான இன்று முதல் இந்தியாவில் 12 ஆயிரம் தியேட்டர்களில் ட்ரைலரை வெளியிடுகிறார்களாம். இதில் 1000க்கு அதிகமான தியேட்டர்களில் படத்தின் 3D தொழில்நுட்ப ட்ரைலர் வெளியாகுமாம்.