செய்தி விவரங்கள்

நடிகர் கருணாஸின் டிரைவர் தற்கொலை முயற்சி - அதிர்ச்சி தகவல்

காமெடி நடிகராக இருந்து பின்னர் அரசியலில் குதித்தவர் நடிகர் கருணாஸ். அவர் தற்போது திருவாடானை தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.

இந்நிலையில் அவரின் கார் டிரைவர் தற்கொலை முயற்சி செய்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

சென்ற மாதம் கருணாஸ் கைதானபோது பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது. அதற்காக கருணாஸின் டிரைவர் கார்த்திக் உட்பட மூன்று பேர் கைதாகினர். பின் ஜாமினில் வெளிவந்தனர்.

இந்நிலையில் போலீசார் அவர்களை தாக்கியதாக கூறி மூவரும் மண்ணெண்ணெய் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அவர்கள் மூவரும் தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.