செய்தி விவரங்கள்

கடைசி நேரத்தில் விஜய்யுடன் மோதலை தவிர்த்த முன்னணி ஹீரோ

கடைசி நேரத்தில் விஜய்யுடன் மோதலை தவிர்த்த முன்னணி ஹீரோ

தளபதி விஜய்யின் சர்கார் படம் தீபாவளிக்காக நவம்பர் 6ம் தேதி திரைக்கு வரும் என ஆரம்பத்திலேயே அறிவித்துள்ளனர். மிகப்பெரிய ஓப்பனிங் வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சமீபத்தில் கதை தொடர்பாக வந்துள்ள சர்ச்சைகள் படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தீபாவளி நாளில் விஜய் ஆன்டனியின் திமிரு பிடிச்சவன் மற்றும் பில்லா பாண்டி படமும் திரைக்கு வருகின்றன.

தற்போது வந்துள்ள லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் விஜய் ஆன்டனியின் திமிரு பிடிச்சவன் படம் வேறொரு தேதிக்கு தள்ளிபோகிறது. அது நவம்பர் 16ம் தேதி வெளிவரும் என கூறப்படுகிறது. அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.