செய்தி விவரங்கள்

பிக்பாஸ் புகழ் சென்ராயனுக்காக அஜித் கொடுத்த பரிசு !!!

பிக்பாஸ் புகழ் சென்ராயனுக்காக அஜித் கொடுத்த பரிசு !!!

 

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் படு சந்தோஷமாக இருக்கிறார் சென்ராயன். நிகழ்ச்சியில் அப்பா ஆனது குறித்து மனைவி கூற அவர் செய்த பாவனைகள் இப்போதும் மக்களுக்கு நன்றாக நியாபகம் இருக்கும். ஆனால் கண்டிப்பாக கமல்ஹாசன் அவர்களிடம் சொன்னது போல் ஒரு பிள்ளை தத்தெடுத்து வளர்ப்பேன் என உறுதியாக கூறியுள்ளார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் அஜித் குறித்து பேசியுள்ளார். அதில், உன்னை கொடு என்னை தருவேன் என்ற படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்றது.

அப்போது அங்கு அதிக குளிர், அனைவரும் ஸ்வெட்டர் அணிந்துள்ளனர், நான் மட்டும் சாதாரண உடையில் இருந்தேன். என் பல் எல்லாம் கடுமையாக ஆடிக் கொண்டு மிகவும் கஷ்டப்பட்டேன். அதைப்பார்த்த அஜித் உங்களிடம் வேறு உடை இல்லையா என்று கேட்டார் இல்லை என்றேன். உடனே அவரது உதவியாளரை அழைத்து இவருக்கு ஸ்வெட்டர் வாங்கிக் கொடுங்கள் என்று கூறினார். எனக்கு 1 மணி நேரத்தில் ஸ்வெட்டர் வந்துவிட்டது, அதை அணிந்த பிறகு தான் எனக்கு உயிரே வந்தது என்றார்.

ஆனால் பார்த்தால் எனக்கு மட்டும் இல்லை அங்கு பணிபுரிந்த அனைவருக்கும் அவர் தான் வாங்கி கொடுத்துள்ளார் என்றார்.