செய்தி விவரங்கள்

சர்ச்சைக்கு நடுவே சாதனையை செய்த சின்மயி !!!

சர்ச்சைக்கு நடுவே சாதனையை செய்த சின்மயி !!!

 

சின்மயி யார் என தற்போது தெரியாதவர்களுக்கு கூட தெரிந்திருக்கும். அண்மைகாலமாக ஊடகம், செய்தி சானல்கள், சமூகவலைதளங்கள் என பலவற்றிலும் அவரின் சர்ச்சைகளே அடிபடுகிறது. Me too மூலம் அவர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை எடுத்து வைத்தார். சினிமாத்துறையில் இது பெரும் சர்ச்சையாகி வழக்கு தொடரும் நிலை வரை போகவுள்ளது.

அண்மையில் அவரை முக்கிய செய்தி சானல் ஒன்று நேர்காணல் செய்தது. இதில் அவரை நிகழ்ச்சி நெறியாளர் ரங்கராஜ் பாண்டே சரமாறி கேள்விகளை கேட்டார். இதனால் சின்மயி சில இடங்களில் திணறினார். அந்த வீடியோவை youtube ல் பதிவிட ஒரே நாளில் அதை 15 லட்சம் பேர் பார்த்துள்ளார்களாம். அதே வேளையில் கமல்ஹாசனை அவர்கள் எடுத்த நேர்காணல் 10 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளதாம்.

இதனால் அந்த நிறுவனமே இதுவரை எந்த பிரபலத்திற்கும் இல்லாதளவில் சின்மயியின் விசயம் மட்டுமே குறைந்த நேரத்தில் அதிகமான பேரை பார்க்கவைத்துள்ளது என கூறியுள்ளதாம்.