செய்தி விவரங்கள்

இளையதளபதி சீரியல் நடிகைக்கு பாலியல் கொடுமை !!!

இளையதளபதி சீரியல் நடிகைக்கு பாலியல் கொடுமை !!!

 

இளைதளபதி வரலாற்று சீரியலில் ராணியாக நடித்து வருபவர் சஞ்சனா கல்ராணி. இவரின் அக்கா தான் நடிகை நிக்கி கல்ராணி என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அண்மையில் இவர் தனக்கு 16 வயது இருக்கும் போது படப்பிடிப்பில் 50 முறை கட்டாயப்படுத்தி முத்தம் கொடுக்க வைத்தாக பாலியல் தொந்தரவு சந்தித்ததாக Me too ல் சம்மந்தப்பட்டவர் யார் என குறிப்பிடாமல் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் அந்த நபர் யார் என தெரியவந்துள்ளது.

கன்ட ஹெண்டதி படத்தில் நடித்த போது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்படத்தின் இயக்குனர் ரவி ஸ்ரீவத்சா மீது தான் அவர் புகார் கூறியுள்ளார். இந்நிலையில் இயக்குனர் மர்டர் படத்தை பார்க்க சொல்லி தான் இப்படத்தில் நடிக்க சொன்னோம். அவரும் ஒத்துக்கொண்டு தான் நடித்தார். கிளைமாக்ஸ் காட்சிகளை கூட பெண்ணுக்கு மரியாதை அளிக்கும் வகையில் வைத்தோம். இப்படத்தின் வெற்றியால் அவருக்கு பல பட வாய்ப்புகள் வந்தது. இப்போது வளர்ந்துவிட்ட பிறகு விளம்பரத்திற்காக எங்கள் மீது புகார் சொல்கிறார். இது சரியல்ல. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சஞ்சனா கல்ராணி திருட்டுத்தனம் செய்பவர்கள் தாங்கள் திருடர்கள் என்று ஒப்புக்கொள்வார்களா? ரவி ஸ்ரீவத்சா தோல்வி அடைந்த இயக்குனர். அவர் வெறும் பொய்களை மட்டுமே பேசுகிறார். நான் ஒன்றும் சாதாரணமான நடிகை கிடையாது. பல இயக்குனர்களுடன் படங்களில் நான் பணியாற்றியுள்ளேன். அவர்கள் எல்லோரின் மீதும் இப்படியான புகார்களை நான் கூறவில்லை. ஆனால் ரவி ஸ்ரீவத்சா மோசமானவர் என கூறியுள்ளார்.

இளையதளபதி சீரியல் நடிகைக்கு பாலியல் கொடுமை !!!