செய்தி விவரங்கள்

அஜித் வசூலை தாண்டிய விஜய் சேதுபதி !!!

அஜித் வசூலை தாண்டிய விஜய் சேதுபதி !!!

 

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடிப்பில் சமீபத்தில் கூட 96 படம் வந்து செம்ம ஹிட் அடித்துள்ளது. இப்படம் கேரளாவில் குறைந்த திரையரங்கில் தான் முதலில் வந்துள்ளது, ஆனால், படத்தின் பாசிட்டிவ் டாக் அடுத்தடுத்த வாரங்களில் திரையரங்கு எண்ணிக்கை அதிகரித்தது.

இந்நிலையில் 96 கேரளாவில் மட்டும் இதுவரை ரூ 6.9 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம், இப்படத்தை ரூ 50 லட்சத்திற்கு தான் வாங்கியுள்ளனர். இதன் மூலம் விநியோகஸ்தர்களுக்கு ரூ 2 கோடி வரை லாபம் கிடைத்துள்ளது, மேலும், கேரளாவில் அஜித்தின் அதிகப்பட்ச வசூல் ஆரம்பம் ரூ 6.7 கோடி. அதை 96 படம் முறியடித்துள்ளது.