செய்தி விவரங்கள்

அதிரடியாக புது அம்சங்களுடன் வாட்ஸ்ஆப் !!!

அதிரடியாக புது அம்சங்களுடன் வாட்ஸ்ஆப் !!!

 

உலகின் முன்னணி சமூக வலைத்தளமான வாட்ஸ்ஆப் தற்போது அதிகளவில் இளைஞர்களால், யுவதிகளாலும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. தனிப்பட்ட இரு நபர்களுக்கு இடையேயான சாட் வசதி மட்டுமின்றி, பலர் குழுவாக இணைந்து சாட் செய்துகொள்ளும் வசதியும் உள்ளதால் வாட்ஸ்ஆப் நண்பர்களுக்கு இடையே குழு உரையாடல்களுக்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

அதிரடியாக புது அம்சங்களுடன் வாட்ஸ்ஆப் !!!

மேலும், தமது பயனாளர்களுக்காக அவ்வப்போது புதுப்புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திவருகிறது வாட்ஸ்ஆப் நிறுவனம்.அந்த வகையில், மேம்பட்ட ஒரு அம்சமாக, குரூப் வீடியோ மற்றும் ஆடியோ காலிங் சேவையை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பரிசோதனை அளவில் இருந்த இந்த வசதி முதல் முறையாக, பயனாளர்கள் பயன்பாட்டுக்கு முழுமையாக கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரே நேரத்தில் அதிகபட்சமாக நான்கு பேருடன் வாய்ஸ் கால் மூலமாகவும் வீடியோ கால் மூலமாகவும் பேச முடியும். உலகம் முழுவதும் உள்ள ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தில் வாட்ஸ் அப் பயனாளர்கள் இந்த சேவையை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.